சர்வதேச நாணய நிதியத்தினால்(ஐ.எம்.எப்.) அறிவிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப் படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றியகுழுவின் நோக்கமாகும் என அரசாங்க நிதி பற்றியகுழுவின் தலைவர் ஹர்ஷ.தசில்வா தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தவணையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கான பொறி முறையினை நடைமுறைப்படுத்தும்போது காணப்படும் கடுமையான சமூக தாக்கங்கள் குறித்தும் அரசாங்க நிதி பற்றிய குழு வினவியது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஏற்படும் சமூகத்தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கையாக இருப்பதாகவும், அந்த விளைவுகளை நிராகரிப்பதற்குசெலவின உச்சவரம்புகள் போன்ற சில பாதுகாப்புக்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் மத்திய வங்கி பதிலளித்தது.
வட்டி வீதங்களைக் கட்டுப்படுத்துவதால் சந்தையில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்துக் குழு கேட்டபோது, தற்பொழுது நாட்டில் குறைந்துவரும் அந்நியச் செலாவணி மேலும் குறைவதைக் கட் டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டடிருப்பதை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந் தான விரிவாக்கப்பட்ட நிதி வசதி மூலம் பண உட்செலுத்தலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், வட்டி வீதங்கள் மீண்டும் தளர்த்தப்படலாம் என்றும். சந்தை மீண்டும் விரிவடை வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும்,அவர்கள் சுட்டிக்காட்டினர்.