வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி .கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேவோ விருது இங்கிலாந்தின் நட்டாலி சிவருக்கு கிடைத்துள்ளது.
வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இர்ணடாவது தடவையாக வென்றெடுத்துள்ளார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் தனதாக்கிக்கொண்டார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் நட்டாலி சிவர் வென்றெடுத்தார்.
வருடத்தின் அதிசிறந்த மகளிர் இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் தஹிலா மெக்ரா தெரிவானார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மத்தியஸ்தராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இலிங்வேர்த் தெரிவானார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகளில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இரண்டு விருதுளை வென்று பாராட்டைப் பெற்றுள்ளார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் கார் பீல்ட் சோர்பஸ் விருதை வென்றெடுத்த பாபர் அஸாம், வருடத்தின் அதி சிறந்த சர்வதேச ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் தனதாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.