கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்பட உள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலான மேம்பால மெட்ரோ வலையமைப்பில் 2.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீட்டு சபையின் (BOI) கீழ் மெட்ரோ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மெட்ரோ சேவையானது 41 கி.மீ. வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முதலீட்டாளர்களால் முழுமையாக நிதியளிக்கப்படும்.