துருக்கிக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க இலங்கை மக்கள் தயார்

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகனுடன்(Recep Tayyip Erdogan) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மற்றும் துருக்கி மக்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கை மக்கள் தயாராக உள்ளார்கள் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போயுள்ள இலங்கை பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

69 வயதான குறித்த பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி உருகொடவத்த தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,800 ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love