வரிகளை ரத்து செய்வது சாத்தியமில்லை- கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதேவேளைதற்போது  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகின்றார். குறித்த உரையில்

வரிகளை இல்லாதொழித்தால் நாட்டுக்கு நூற்று அறுபத்து மூன்று பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் எனவும் அதனை தற்போது செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.

‘நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லைஇ வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து நாடு மீண்டு வரும்இ நாட்டுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுப்பேன்.இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உண்மை நிலையை மக்கள் புரிந்துகொள்வார்கள். நாம் விருப்பத்துடன் வரி விதிக்கவில்லை.எமக்கு விருப்பமானதைச் செய்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

Spread the love