இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பின்பற்றி வருகிறார்.
அவர் தற்போது நலமுடனும் இருக்கிறார் . சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.