மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை – பந்துல குணவர்தன

நாட்டின் போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் கனவை நனவாக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேகா இன்னோவேட்டிவ் இன்ஸ்டிட்யூட்டின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் உற்பத்தித் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் அதற்குப் பங்களிக்கும் பல்வேறு துறைகளின் பங்களிப்பையும் அமைச்சர் அவதானித்துள்ளார்.

மின்சாரமாக மாற்றப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுநர் நிலைமைகள் குறித்து அமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டு வந்தார். வேகா இன்னோவேட்டிவ் நிறுவனம் தயாரித்த காரையும் ஆய்வு செய்தார். இந்நாட்டில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் கொழும்பு 10 இல் ட்ரேஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவப்பட்டுள்ளது. “வேகா இன்னோவேட்டிவ் இன்ஸ்டிடியூட் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மதிப்பிடப்பட்ட பல புதிய வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளது.

“புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் கருத்தாக்கம் மற்றும் எரிபொருளின் அதிக விலை காரணமாக, பொது போக்குவரத்து சேவை மற்றும் தனியார் போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளது. இது தொடர்பான அளவுருக்கள் மற்றும் அளவுகோல்களை மோட்டார் போக்குவரத்து ஆணையர் முன்வைத்துள்ளார்,” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

UNDP உதவியின் கீழ் இலங்கையில் 300 முச்சக்கர வண்டிகளை மின்சார வாகனமாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “அதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு புதிய உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்கு அவர்களின் வடிவமைப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது,” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டிகள் மட்டுமின்றி, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், படகுகள் உள்ளிட்ட பல வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிக தேவையுடைய ஒரு தொழிலாக வளர்ந்து வரும் இலங்கை ரயில்வேயின் பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் சொத்துக்களை வழங்கவும் தேவையான வசதிகளை வழங்கவும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love