டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நிசங்க, திக்வெல்ல புதிய சாதனை

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கை- மேற்கிந்திய அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி ஆன்டிகுவாவில் நடை பெற்றது . இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களும் , மேற்கிந்திய அணி 271 ஓட்டங்களும் எடுத்தன. 102 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 4-வது நாளான நேற்று முன்தினம் அனைத்து விக்கட்களையும் இழந்து 476 ஓட்டங்கள் குவித்து , எதிரணிக்கு 375 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வரிசையில் 6-வது ஆக விளையாடிய அறிமுக வீரர் பதும் நிசங்க 103 ஓட்டங்களும் (252 பந்து, 6 பவுண்டரி), விக்கெட் கீப்பர் நிரோஷன் திக்வெல்ல 96 ஓட்டங்களும் அடித்தனர் .இதன் மூலம் 22 வயதான நிசாங்க அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 4-வது இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதேசமயம் இதுவரை சதம் ஏதும் அடிக்காத திக்வெல்லாவுக்கு இது 17-வது அரைசதமாகும். அந்த வகையில் அதிக அரைசதங்கள் அடித்த சாதனையாளர் வரிசையில் இந்தியாவின் சேத்தன் சவுகானை பின்னுக்கு தள்ளி திக்க்வெல்ல முதலிடம் பிடித்துள்ளார் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar