JICA பணிப்பாளரை சந்தித்த இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் சாதகமாக முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் இலங்கைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகரவமைப்பின் (JICA) வேலைத்திட்டங்கள் ஊடாக ஆதரவளிக்கப்படும் என JICA தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெருயுகி இட்டோவு தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் டெருயுகி இட்டோவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில், நிகழ்ச்சி; இந்நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் விளக்கமளித்தார். பல வருடங்களாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தற்போது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சீர்திருத்தங்களை மக்கள் சிரமமானாலும் தகவமைத்துக் கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி திறைசேரி செயலாளர் ஆர்.எம்.பி ரத்நாயக்க, வெளிவிவகார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர, மேலதிக பணிப்பாளர் நாயகம் சம்பத் மந்திரிநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகரமைப்பின் (JICA) இலங்கை அலுவலகத்தின் பிரதான பிரதிநிதி டெட்சுயா யமடா மற்றும் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Spread the love