7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாய் 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,500 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் கோதுமை மா 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 230 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் பருப்பு 19 ரூபாவால் குறைக்கப்பட்டு 339 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனி 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 218 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 06 ரூபாவால் குறைக்கப்பட்டு 129 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சையரிசி 09 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் வௌ்ளை நாட்டரிசி 07 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச அறிவித்துள்ளது.

Spread the love