விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற அடிக்கட்டு பசளை 25 சதவீதம் வரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த பசளை தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த உரத்தை விவசாய சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாட்டில் தற்போது 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் உள்ளதாகவும் 30,000 மெட்ரிக் தொன் உரம் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.