மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுர் வெற்றி பெற விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார். 82 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 50 ஆவது முறையாக 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து இந்திய வீரர்களில் சாதனை படைத்தார்.
வேறு எந்த இந்திய வீரரும் 50 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது இல்லை. தவான் 49 தடவை இதை செய்துள்ளார். டேவிட் வார்னர் 60 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கோலி அதற்கு அடுத்தப்படியாக 2 ஆவது இடத்தில் இருக்கிறார்.