சிறுபோகத்தில் பயன்படுத்துவதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் 3800 மெட்ரிக் தொன் யூரியா வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள உரத்தொகை அடுத்த வாரம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்கொடையாக இந்த உரம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 31000 மெட்ரிக் தொன் யூரியா உரம் பெரும்போகத்திற்காக நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளது.