இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்காக காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானம்

பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, சமய நிகழ்வுகள் தவிர இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது சேதமடைந்த சொத்துகளை புனர்நிர்மாணிப்பதற்காக 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக காலி முகத்திடல் சேதமடைவதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love