இலங்கையில் ஒன்பது நிலநடுக்கங்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 09 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 04 மாதங்களுக்குள் 09 தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவென பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலன நில அதிர்வுகள் நாட்டின் உட்பகுதியில் பதிவாகியுள்ளதுடன், சில நில அதிர்வுகள் நாட்டை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன. அதிகூடிய மெக்னிடியூட் அளவான நில அதிர்வு புத்தல – சூரியவெவ பகுதியில் பதிவாகியிருந்தது.

நாட்டில் பதிவாகிய நில அதிர்வுகள் தொடர்பான தரவுகள் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தரவுகளை சர்வதேச தரவுகளுடன் ஒப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love