சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை ஜனாதிபதி

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துக் கொள்ளவுள்ளார்.

லண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

1953 ஆம் ஆண்டு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட சுமார் 8,200 பேரில் இருந்து வியத்தகு குறைப்பு, மன்னன் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு விழாவைக் காண தேர்ந்தெடுக்கப்பட்ட 2,200 விருந்தினர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை பிரித்தானியா செல்லவுள்ளார். கடந்த ஆண்டு செப்டெம்பரில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணத்திற்குப் பின்னர் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

Spread the love