தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆகக் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2% ஆக இருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் 15. 6 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, மார்ச் மாதத்தில் 42.3% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், மார்ச் மாதத்தில் 54.9% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 39% ஆக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.