வரியில்லா விற்பனை நிலையத்தில் 5000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி

வெளிநாட்டில் இருந்து திரும்பும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இராஜதந்திரிகள், கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வரியில்லா விற்பனை நிலையத்தில் 5000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு மடிக்கணினி, ஒரு டெப்லெட், ஒரு டெஸ்க்டாப் மற்றும் இரண்டு கமராக்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Spread the love