UNESCO-வில் மீண்டும் இணைகிறது அமெரிக்கா

UNESCO அமைப்பில் மீண்டும் இணைய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. UNESCO அமைப்பில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான UNESCO-வில் பாலஸ்தீனத்தை இணைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, UNESCO-விற்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தின.

அத்துடன், UNESCO அமைப்பு தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்த நிலையில், UNESCO-வில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வள ஆதார மேலாண்மைப் பிரிவிற்கான இணையமைச்சா் ரிச்சா்ட் வா்மா UNESCO-வின் பொது இயக்குநா் ஆவ்ட்ரே அஸூலேவிடம் சமா்ப்பித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தற்போது பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் தனி நாடுகளாக இயங்கி வருகின்றன. எனினும், இஸ்ரேலை பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை இஸ்ரேலும் தனி நாடுகளாக இதுவரை அங்கீகரிக்கவில்லை.

Spread the love