உலகம் முழுவதும் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் அதே சமயம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,73,80,659 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 06 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,82,67,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar