இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடை பெறுவதோடு பைசர்-பையோ என்டெக் தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மற்றும் மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து அரசிடம் பைசர்-பையோ என்டெக் தடுப்பூசி நிறுவனம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் 12 முதல் 15 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மூலம் அவர்களின் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ள 2,260 சிறுவர்கள் மீது சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 100 சதவீதம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 2 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar