இவ்வாண்டின் முதல் காலாண்டில் இலங்கை முதலீட்டுச் சபைக்கு 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இடையூறாக காணப்படும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவின் ஊடாக முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட 73 முதலீட்டுத் திட்டங்களில் 70 முதலீட்டுத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.