உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை, உலகின் நம்பர் வன் பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அன்றில் இருந்து தொடர்ந்து டுவிட்டர் தளத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்வதில் மஸ்க் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இடையில் ஒரே ஒருநாள் டுவிட்டரின் பறவை லோகோவை மாற்றி நாயின் படத்தை வைக்குமளவுக்கு அவரது செயல் இருந்தது.
இப்போது டுவிட்டரில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் மஸ்க். ஆனால், இம்முறை டுவிட்டரை ரீ-பிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி டுவிட்டர் தளம் இனி X என்ற பெயரில் மாற்றப்படும் என்று கூறியிருந்த நிலையில், அதனை அமலுக்கும் கொண்டு வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக டுவிட்டர் மாறியதன் அடையாளமாக X என பெயர் மாற்றப்பட்டுள்ளது.