மன்னார் காற்றாலை மின் நிலையத்தினுடாக நேற்று மொத்தமாக 15 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் உற்பத்திக்கு இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விண்ட்ஃபோர்ஸ் மற்றும் ஹிருராஸ் பவர் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை மின் நிலையமானது ஆறு காற்றாலை விசையாழிகளைக் கொண்டதாகவும், உள்ளூர் பொறியியலாளர்களின் நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட நிறைவு திகதிக்கு முன்னரே இது இயக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட 10 மெகாவொட் மின்சாரம் ஜூன் மாதம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது, இரண்டாவது கட்டத்தின் கீழ் 5 மெகாவொட் மின்சாரம் கட்டத்திற்கு சேர்க்கப்பட்டது.