விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை இவ்வாண்டு நிறைவு செய்ய சீனா திட்டம்

சீனா சொந்தமாக அமைத்து வரும் விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்வாண்டில் 40 இற்கும் மேற்பட்ட எவூர்திகளை விண்வெளி மையத்துக்கு அனுப்பவும் சீனா திட்டமிட்டுள்ளது. மனிதர்களையும் ஆய்வுப்பணிகளுக்காக விண்வெளியில் களமிறக்கவும் சீனா முடிவு செய்துள்ளது.


புதிய ஆண்டுக்கான தனது விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் தொடர்பாக தகவல்களை சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதிலேயே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை அன்று சீனா 2021 ஆம் ஆண்டில் தனது கடைசி விண்வெளி ஏவுதல் பணியை மேற்கொண்டது. சீனாவின் 55 ஆவது விண்வெளி எவூர்தியான லோங் மார்ச் 3பி (long march 3b) பரிசோதனை வடிவிலான செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு சீனாவின் லோங் மார்ச் ஏவூர்திகள் அதிக தடவைகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

Spread the love