ஜல்லிக்கட்டு: காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் முதன்மையான, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு, அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதித்துள்ளது. இதன்படி காளைகளின் உரிமையாளர்களும், பார்வையாளர்களும், 2 டோஸ் கொரோனாத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதுடன், ஜல்லிகட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டுமெனவும், தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழையும் தம்வசம் வைத்திருக்க வேண்டுமெனவும், உத்தரவிட்டது. அதேநேரம், காளைகள் அனைத்தும், கட்டாயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவை தமிழகத்திலுள்ள காளை மாடுகள் என்பதையும், உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, உடற்தகுதிப் பரிசோதனை செய்திருத்தல் அவசியம் எனவும், தமிழக அரசு இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Spread the love