உக்ரைன் மீது படையெடுப்பதற்காக, ரஷ்யா தனது சொந்தப்படைகள் மீது தானே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா, பல்லாயிரம் இராணுவத்தினரைக் குவித்து வைத்துள்ளது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டு வருகின்றது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகின்றது. அவ்வாறு படையெடுத்தால் உக்ரைனுக்கு அமெரிக்காவும் நேட்டோ படைகளும் ஆதரவளிக்கும் என்று வெள்ளை மாளிகை வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. இப்படியிருக்கையில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக தனது படைகளின் ஒரு பகுதிக்குத் தானே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்கா தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது. தன்படைகள் மீது தானே தாக்குதலை நடத்திவிட்டு, உக்ரைனே இந்தத் தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்து படையெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்றும் அமெரிக்கா தன் குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளது. எனினும் ரஷ்யா அதை மறுத்துள்ளது.