இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பொறுப்பில் இருந்து கோலி விலகல்

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கிரக்கெட் தலைவரான விராட் கோஹ்லி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான எதிர்பாராத தொடர் தோல்வியையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோலி முன்னதாக 2021 ரி-20 உலகக் கிண்ணத்துக்கு பிறகு இந்திய ரி-20 அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பும் ரோகித் சர்மாவிடம் போனது. தற்போது டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியது அவரது – ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பி.சி.சி.ஐ.- விராட் கோஹ்லிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களே அவரது விலகலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் இடையில் எம்.எஸ் தோனி விலகியதும், டெஸ்ட் தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி சாதனை படைத்த அவர், 40 வெற்றிகளையும் 17 தோல்விகளையும் தலைவர் பதவியிலிருந்து அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனை அதிக வெற்றிகளை அணிக்காக பெற்றுக் கொடுத்த தலைவர் அதிகளவான ஓட்டங்களை பெற்ற இந்திய அணியின் தலைவர் (5864) இந்திய அணியின் தலைவராக அதிகளவான சதங்கள் (20) இந்திய அணியின் தலைவராக அதிகளவான இரட்டை சதங்கள் (7) இந்திய அணியின் தலைவராக அதிகளவான ஓட்ட சராசரி (54.80).


Spread the love