எண்ணெய் கசிவினால் கறுப்பாக மாற்றம் பெற்ற அழகிய கடற்கரை

பாரிய எண்ணெய்க் கசிவினால், பெரு நாட்டின் கடற்பகுதி, சுமார் 2 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு, கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கவேரா மற்றும் பாஹியா பிளான்கா தீவுகளின் கடற்கரையில், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பெருவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரூபன் ரமிரெஸ் கூறியுள்ளார். தங்க நிறத்தில் ஜொலித்த இப்பகுதி, தற்போது கறுப்பு நிறத்தில் காணப்படுவதாகவும், லாபாம்பிலா சுத்திகரிப்பு நிலையத்திற்கு, எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலில் இருந்தே எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

டோங்கா அருகே, சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால், கடலில் எழுந்த உயர் அலைகள் காரணமாக, கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், கடற்கரையில் ஏற்பட்டுள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றி, சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Spread the love