நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் (26/01) 30,253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் இயலுமானவரை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.