வட கொரியா நேற்று வியாழக்கிழமை கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு வடகொரியா ஆறாவது முறையாக ஏவுகணைச் சோதனையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பினை புறக்கணித்த வட கொரியா, தொடர்ந்து தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றி வருகின்றது.