கவனத்தை ஈர்த்த ‘கறுப்பு ஜனவரி’

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று ‘கறுப்பு ஜனவரி’ கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், தாக்குதல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். ஊடக மையம், சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், மீடியா போரம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அவர்களின் ஒத்துழைப்பை பெறும் விதத்திலும் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 

Spread the love