இத்தாலியின் ஜனாதிபதியாக செர்ஜியோ மெட்டரெல்லா இரண்டாவது முறையாக தேர்வு

இத்தாலியின் ஜனாதிபதியாக செர்ஜியோ மெட்டரெல்லா(Sergio Materella) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


பிரதிநிதிகள் சபையில் 1,000 இற்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்றுவாக்கெடுப்பில், மெட்டரெல்லா 1009 வாக்குகளில் 759 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வாரம் முறைப்படி பதவியேற்பு விழா நடை பெறவுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியான மெட்டரெல்லாவின் ஏழு ஆண்டு பதவிக்காலம், நாளை மறுதினத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. 

General view of the Italian Parliament during the eighth round of voting to elect a new President of Italy on January 29, 2022 in Rome, Italy

Spread the love