சுமார் 11 மில்லியன் வௌிநாட்டு பணத்தை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 46,000 யூரோ கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 இலக்க விமானத்தில் துபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணப்பொதியில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.