பிரதமர் நரேந்திர மோடியின் வலை ஒளி (YOU TUBE ) சமூக வலைதளத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை, ஒரு கோடியைக் கடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக, நாட்டு மக்களுடன் தொடர்பில் உள்ளார். இந்நிலையில், அவரது வலை ஒளி (YOU TUBE ) சமூக வலைதளத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது.
அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை (Joe Biden) ஏழு இலட்சம் பேர் மட்டுமே வலை ஒளிப்பக்கத்தினை பின் தொடர்கின்றனர். பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolzano) 36 இலட்சம் பேரும், மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரை(Andres Manuel Lopez Obrador) 30.7 இலட்சம் பேரும், இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை (Joko Widodo) 28.8 இலட்சம் பேரும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் (American White House) வலையொளி சமூக வலைத்தளத்தினை 19 இலட்சம் பேரும், பின்தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் வலையொளி சமூக வலைத் தளத்தினைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை, 5.25 இலட்சமெனத் தெரிவிக்கப்பட்டது.