நாடளாவிய ரீதியில் நாட்டை வளப்படுத்தும் ஒரு இலட்சம் வேலைகள் அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்

அனைத்து பிரஜைகளினதும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை வளப்படுத்தும் ஒரு இலட்சம் வேலைகள் அபிவிருத்தி திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.

“கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம், நாட்டை செழிப்பான தேசமாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, ஒரு கிராம சேவகர் பிரிவில் 05 அல்லது 06 திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. “கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (03) காலை 8.52 மணிக்கு நாட்டின் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் இடம்பெறவுள்ளது.

Spread the love