சீனாவில் நேற்று முன்தினம் 1 ஆம் திகதி புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
சீனாவில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடிவருகின்றனர். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி எருது வருடம் முடிவடைந்து, நேற்று முன்தினம் புலி வருடம் ஆரம்பித்தது. அந்நாட்டுக் கலாசாரத்தின் படி புலி, வலிமை மற்றும் தைரியம் இரண்டையும் குறிக்கிறது. அதன்படி இந்த புதிய வருடம் துயரத்திலிருந்து மக்களை மீட்டு அமைதியைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.