ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் யேமன் நாட்டின் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போரில் அமெரிக்கா பங்கெடுக்கவுள்ளது. ஐக்கிய அரபு ராச்சியத்தின் மீது கடந்த சில தினங்களாக சியா ஹவுத்தி பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி இருந்தனர். இதனை அடுத்து ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், அமெரிக்கா ஏவுகணை எதிர்ப்பு தாங்கிகள் மற்றும் தாக்குதல் விமானங்களை அனுப்பவுள்ளது. ஐக்கிய அரபு ராச்சியத்தின் இளவரசருக்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பின்னணி கொண்ட சியா ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராக யேமனில் தாக்குதல் நடத்தும் கூட்டுப் படையில் ஐக்கிய அரபு ராச்சியம் பங்கெடுத்துள்ளது. இந்த நிலையிலேயே ஹவுத்தி பயங்கரவாதிகள் ஐக்கிய அரபு ராச்சியத்தின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
for more details-
https://www.aljazeera.com/news/2022/2/1/us-military-fired-missiles-during-yemen-houthi-attack-on-uae