பெருவின் பிரதமர் ஹெக்டர் வேலர், தனது மகளையும், மறைந்த மனைவியையும் அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், பிரதமர் பதவிக்குப் பெயரிடப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர், தான் பதவி விலகுவதாக உறுதிப்படுத்தினார்.
ஹெக்டர் வேலரைப் பிரதமராக நியமித்தமைக்கு பரவலான கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பெட்ரோ காஸ்டி லோ, மூன்று நாட்களுக்குப் பின்னர், மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பதாகக் கூறினார். இந்த நிலையில், ஹெக்டர் வேலர் தனது பதவியை இராஜினாமா செய்தார். குடும்ப வன்முறையின் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தனது இராஜினாமாவைக் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியதுடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்களை அடிப்படையாகக் கொண்டவையென்று, அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
ஹெக்டர் வேலரின் நியமனம் நிறைவடைந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள் வெளிவந்தன. அதில் அவரது மகளும், மறைந்த மனைவியும் பாலின வன்முறையில் ஈடுபட்டதாக, அவர் மீது குற்றம் சாட்டியுள்ளமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் பதவியேற்ற நான்கு தினங்களிலேயே அவர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டியேற்பட்டது.