கமிலாவுக்கு ராணி அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என விரும்புவதாக எலிசபெத் மகாராணி தெரிவித்தார். எலிசபெத் மகாராணி முடி சூடி 70 ஆவது வருட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைய எதிர்காலத்தில் அவர் கமிலா மகாராணி என அழைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியாரின் விருப்பம் குறித்து வெளியான தகவல் அரச குடும்பத்தை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு முடி சூடியமை குறிப்பிடத்தக்கது.