தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதி விஜயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. லஞ்ச ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் ஜெட் விமானத்தைப் பரிசாக ஏற்றுக் கொண்டதன் மூலம் பிரதமர் லஞ்சம் பெற்றாரா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
2021 டிசெம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜெட் விமானம் மூலமான பயணம் தொடர்பான செய்திகள் பரவியதை அடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டது என பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜ பக்ஷ தெரிவித்திருந்தார்.