அதிக விலைக்கு உரக்கொள்வனவு செய்ய வேண்டிய நிலை – அதிர்ச்சியில் விவசாயிகள்

எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதியில் உர மூடையின் விலை 20,000 ரூபாவுக்கு மேல் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையினால் விவசாயிகள் அதிக விலைக்கு உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.

மேலும், உரம் இறக்குமதி தனியாரால் செய்யப்படுவதால், உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதால், விவசாயிகள் சாகுபடியில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அவர் கூறினார்.

Spread the love