இலங்கை மீது போர்க்குற்றங்களை சுமத்த பிரித்தானியா முயற்சி-ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பமாகவுள்ள 49 ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையின் விடயம் முக்கியமானதாக இருக்கும். வன்னியில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரச படையினர் சுற்றிவளைத்த போது பல தகவல்களை, அப்போது இலங்கையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் அன்டனி காஸ் சேகரித்தார்.


இலங்கையின் பொறுப்புகூறல் விடயங்களில் அதிக அக்கறை கொண்டுள்ள பிரித்தானியர்களுக்கு அவர்களின் சொந்த பணியாளர்கள் அனுப்பிய தகவல்கள் உதவியிருக்கும்.  மேலும், சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் அரச படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love