பதிலளிக்கத் தயாராகிறது இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.


இதற்கு எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் நியாயமான தீர்வு கிடைக்கும் என பாரிய நம்பிக்கையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெரும்பாலான சர்வதேச நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Spread the love