பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்! -மனித உரிமைகள் ஆணைக்குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கான புதிய வரைவிலக்கணத்துடன் பயங்கரவாதக் குற்றமும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று நம்புகின்றோம் என்று, இந்தமாத முற்பகுதியில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது. நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் பயங்காவாகம் தொடர்பிலான விடயங்களை விசாரிக்க வேண்டும் என ஆணைக்குழு  சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கால வரையறையற்ற காவலில் வைக்கப்படுவது அரசமைப்பை மீறுவதாக உள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Spread the love