சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் நேற்று திங்கட் கிழமையுடன் நிறைவடைந்தது. இதற்கமைய, நோர்வே 16 தங்கப்பதக்கங்களை வென்று முதலாம் – இடத்தினை கைப்பற்றியது.
நோர்வே 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கலாக 37 பதக்கங்களை வெற்றிகொண்டது. இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்ட ஜேர்மனி 12 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கலாக 27 பதக்கங்களை கைப்பற்றியது. அதேநேரம், 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கலாக 15 பதக்கங்களை கைப்பற்றிய சீனா மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. அமெரிக்க, சுவீடன், நெதர்லாந்து என்பன தலா 8 தங்கங்களுடன் அடுத்தடுத்த இடங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.