இன்றைய திகதியில் எம் நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவையானது நாளாந்தம் அதிகரித்தவண்ணமே காணப்படுகிறது, என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த டீசலுக்கான கேள்வி தற்போதைய நிலையில் 8,000 மெற்றிக் டொன் தேவையாக அதிகரித்துக்காணப்படுவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல், 3,000 மெற்றிக் டொன்னாக இருந்த பெற்றோலுக்கான வாராந்த கேள்வி, 4,500 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் அத்துடன், இந்நிலை நாட்டினை பாரதூரமான நிலைக்கு இட்டுச்செல்லும் என சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அரசினால் மேற்கொள்ள படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் இலங்கைத்துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டொன் டீசலை விடுவிப்பதற்காக எரிசக்தி அமைச்சகம் பணத்தைச் செலுத்தியுள்ளது. அதன்படி நேற்று (22) இரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகத்திலிருந்து நம்பகமான தகவல்கள் தெரிவித்து நிற்கின்றன, அதனடிப்படையில் குறித்த டீசல் தொகையானது கூடிய விரைவில் கப்பலிலிருந்து தரையிறக்கப்படும் என அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.