உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ்- 225 மிரியா (Antonov-225 Mriya) தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள ஒரு விமான நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் எரிந்தது. உக்ரைன் அரச ஆயுத உற்பத்தியாளரான Ukrobo ronprom இதனை தெரிவித்துள்ளது.
இது கீவ் அருகே ஹோஸ் டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தில் நடந்தது என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விமானத்தை மறுசீரமைக்க 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவாகும் என்றும் நீண்ட காலம் எடுக்கும் என்றும் அது கூறியது.