இலங்கையில் உக்ரேய்னியர்களின் விசாக்காலத்தை நீடிக்க தீர்மானம்

உக்ரேய்னில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்கியுள்ள உக்ரேய்னியர்களின் விசாக் காலத்தை நீடிப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்தள்ளது. உக்ரேய்னிய சுற்றுலாப் பயணிகள் சுமார் 4.000 பேர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர்.

உக்ரேய்னில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் விசாவை நீடிக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரேய்னுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் அவர்கள் வேறு நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 

Spread the love