உக்ரைன் மீது வக்யூம் குண்டுகளை வீசியதாக ரஸ்யா மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் திங்கள்கிழமை அதாவது நேற்று முன்தினம் ரஷ்யாவானது தற்போதைய மோதலில் வக்யூம் குண்டுகள் மற்றும் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

ரஷ்யா பொதுமக்கள் தஞ்சம் புகுந்த பாலர் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாகவும் மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் தெர்மோபரிக் (வக்கியூம் குண்டுகள்) ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்யா தனது நாட்டின் மீதான படையெடுப்பில் வெற்றிட வெடிகுண்டு என்றும் அழைக்கப்படும் தெர்மோபரிக் ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளது, என்று கூறியுள்ளார். “ரஷ்யாவானது இன்று வக்யூம் குண்டைப் பயன்படுத்தியுள்ளது,” என்று திங்களன்று, சட்டமியற்றுபவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு மார்க்கரோவா கூறினார். “…ரஷ்யா உக்ரைன் மீது ஏற்படுத்த முயற்சிக்கும் பேரழிவு மிகப்பெரியது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Spread the love